search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன் புகார்"

    களக்காட்டில் முதியவர் மாயமானது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் முதியவரை தேடி வருகிறார்கள்.

    களக்காடு:

    களக்காடு ஆவுடைவிலாசம் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது72). இவரது மனைவி வசந்தா. இவர்கள் மகன் முத்துராஜுடன் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த 25-ந் தேதி பழனி ஆற்றுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பழனி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது மகன் முத்துராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான பழனியை தேடி வருகின்றனர்.

    வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயமானது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பழைய கரூர் ரோடு மோகன் தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சரோஜா (வயது 55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் இது வரை வீட்டுக்கு வரவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அவர் எங்கே சென்றார் என தெரியவில்லை.

    இது குறித்து சரோஜாவின் மகன் யுவராஜா ஈரோடு தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள். 

    வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வந்தவாசி:

    வந்தவாசி அருகே அதியனூர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி அஞ்சலை (வயது 53). இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மாட்டுகொட்டகையில் பால் கறக்க சென்றார். அப்போது சமீபத்தில் பெய்த பலத்தமழையின் காரணமாக மின் கம்பத்தில் இருந்து வீட்டுக்கு வரும் மின்வயர் அறுந்து தொங்கி கொண்டிருந்தது. இதனை கவனிக்காத அஞ்சலை அங்கு சென்றபோது அவர் மீது மின்வயர் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி அஞ்சலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அஞ்சலையின் மகன் ஆனந்தமுருகன் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    அறந்தாங்கி அருகே இன்று காலை மகனுடன் தொழுகைக்கு சென்ற தொழிலதிபரை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினம் சத்திரம் தெருவை சேர்ந்தவர் சர்க்கரை ஜமால் என்ற ஜமால் முகமது (வயது 50).

    கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்களிடம் மீன்களை வாங்கி அதனை பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருந்தார்.
    தினமும் அதிகாலையில் எழும் ஜமால் முகமது சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு தொழுகைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை எழுந்த அவர் தனது மகன் யாசர் அராபத் (25)துடன் 4.45 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளி வாசலுக்கு தொழுகை நடத்த நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு திடீரென டவேரா கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜமால் முகமதுவை குண்டுகட்டாக தூக்கி காரில் போட்டது. இதனை தடுத்த அவரது மகன் யாசர் அராபத்தை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    அதிகாலை நேரமாக இருந்ததால் செய்வதறியாது தவித்த யாசர் அராபத் ஊருக்குள் சென்று  தனது உறவினர்களிடம் தெவித்தார்.  அவர்கள்  சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். காரில் கடத்தி சென்றவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்ற விபரம் தெரியாமல் அவர்கள் பதட்டம் அடைந்தனர்.

    பின்னர் நடந்த சம்பவம் குறித்து யாசர் அராபத் கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்த ஜமால் முகமதுவுக்கு ஏராளமான தொழில் போட்டிகள் இருந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழிலுக்கு போட்டியாக இருந்தவர்கள் ஜமால் முகமதுவை கடத்தி சென்றார்களா? அல்லது அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கடத்தி சென்றார்களா? என்பது  உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சமீப காலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலோர பகுதிகள் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் தொடர்புடைய நபர்கள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையிலும் போலீசார் முதல் கட்டவிசாரணையை தொடங்கி உள்ளனர்.
    ×